Saturday, May 26, 2012

அதிகாரிகள் தனக்கு கீழ உள்ள அதிகாரிய எப்பிடி குறை சொல்லலாமுன்னு தான் பாக்குறாங்களோ தவிர, அவங்க செய்த வேலை நிறைவா இருக்கும்  போது பாராட்டனும் என்றோ  நினைக்குறது இல்ல ,தவிர அவங்களுக்கு வேண்டிய நல்லது  செய்யனுமுன்னோ, துறைக்கு வேண்டிய நல்லது  செய்யணும், என்றோ நினைக்கிறதே கிடையாது போல.இது எல்லா துறைக்கும் பொருந்தும் போல.........  
அவங்க அவங்க நியாயம் மட்டும் தான் நினைக்கிறாங்க .உண்மை என்ன ?அடுத்தவங்க பக்கம் உள்ள நியாயம் என்ன? என்று யோசிக்க கூட மாட்டேங்கிறாங்க  இது என்ன நியாயமோ தெரியல் ?! நாம சொல்லும் போதாவது கேக்க்கலாமுள்ள  அதுவும் கிடையாது ம்.. ம்...என்ன செய்ய 
முடியும் ?? 
பஸ் ல உக்காதிருந்தேன் .கண்டக்டர் வந்த உடன் முதல் ஆள் கிட்ட ஐம்பது, நூறுன்னு கொடுத்தா என்ன பண்றது என்று கேட்டார் ,நான் சொன்னேன் ஒரு டிக்கெட் 38  ரூபா இதுக்கு போய் ஐம்பது நூறு கொடுக்காதீங்க அப்படின்னா என்ன செய்வாங்க என்று கேட்டேன். முறைத்து பார்த்ததோடு சரி .முன்னாடி வரைக்கும் போய் டிக்கெட் போட்டுவிட்டு பின்னாடி வந்தா, ஒரு ஆளு டிக்கெட்டே தரலின்னார், ஒருத்தர் பத்து ரூபா மீதி தரனும் என்றார். .இப்படி ஆள் ஆளுக்கு ஒன்னு ஒன்னு சொன்ன உடனே இப்படி வண்டியில ஏறுன உடனே யாராவது எதாவது சொன்னா  இப்படி தான் தப்பு தப்பா  ஆகும் அப்படின்னார். .நான் சொன்னேன் இரண்டு ரூபாவுக்கு ஐம்பது ,நூறு கொடுக்கலே இல்ல நீங்க சில்லறை வேணுமின்னு சொன்ன உடனே எங்க இறக்கி விட்டுர்ருவிங்களோ அப்பிடின்னு பயந்து போயிட்டேன் .நீங்களும் பயந்துட்டின்களா என கேட்டேன் ,முறைச்சிட்டு போனாரு......